Guinness World Record and Bodhi World Record Holders....
காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த மாஸ்டர்-லீ ஷிட்டோ-ரியூ கராத்தேவின் மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை மற்றும் போதி உலக சாதனை படைத்துள்ளனர்...
உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தால் சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் உலக சாதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 5000 கராத்தே மாஸ்டர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இதில் 2996 பேர்கள் வெற்றி பெற்றனர்.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் நமது ஊரைச் சேர்ந்த 19 மாணவர்களை ஷீஹான் நவாஸ் அவர்கள் கலந்து கொள்ளச் செய்து 19 மாணவர்களையும் உலக சாதனையாளர்களாக மாற்றியுள்ளார். இந்த உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, எங்கள் கராத்தே பள்ளியின் மாணவர்கள் உலக சாதனை சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இதில் மூன்று வயது மாணவி செல்வி அயனா அய்சல் கின்னஸ் மற்றும் போதி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment